Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை

-

- Advertisement -

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கைஇது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவதற்கே நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு, மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனை தொகுதி மறுவரையறையா?

எந்த மாநிலத்துடனும் ஆலோசனை செய்யாமல் தொகுதி மறுவரையறையை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தொகுதி மறுவரையறைால் பாதிக்கப்படும் மாநிலங்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்; கொள்கையே முக்கியம். நான் முதலமைச்சர் மட்டும் அல்ல, திராவிட பேரியக்கமான திமுகவின் தலைவர். தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை இது.

we-r-hiring

நாங்கள் சுயமரியாதைக்காரர்களான எங்களுக்கு கொள்கைகள்தான் முக்கியம். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைப்போம். மோடிக்கு தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை; என்னுடைய தலைமையில் போராட்டத்தை முன்னெடுப்பேன். இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை மோடி பார்க்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் நிச்சயம் பங்கேற்பார்கள். பாதிக்கப்பட்டால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் ஒவ்வொரு குடும்பமும் தெருவில் இறங்கி போராடும்.

முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். வடமாநிலங்களுக்கு வாரி வழங்குவதைபோல ஏதாவது நடந்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். தேர்தல் என்பதால் எங்கள் கவனம் தேர்தலில் இருக்கும் கமுக்கமாக தொகுதி மறுவரையறை செய்துவிடலாம் என எண்ணாதீர்கள். பழைய திமுகவை இந்தியா திரும்ப பார்க்கவேண்டி இருக்கும். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைப்போம்” என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“கலைஞர் கனவு இல்லம்” திட்டப் பயனாளியின் வீட்டுக்கு விருந்தினராக சென்ற முதல்வர்…

 

MUST READ