Homeசெய்திகள்இந்தியா6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…

6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…

-

- Advertisement -

மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் இருசக்கர வாகனப் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.6 மணிக்கு மேல் பைக் ஓட்ட தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனப் பயணங்களுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளின் படி, தேர்தல் காலத்தில் பைக் பேரணிகள் நடத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் பைக் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

நாளை நடைபெற உள்ள முதற்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, 152 தொகுதிகளில் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு அமைதியாகவும், குற்றச்செயல்கள் இன்றி நடைபெறவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

MUST READ