Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டுக்குள் விமான பயண கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது!

தமிழ்நாட்டுக்குள் விமான பயண கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது!

-

- Advertisement -

தமிழ்நாட்டுக்குள் பயணிப்பதற்கான உள்ளூர் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டுக்குள் விமான பயண கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது!

we-r-hiring

தமிழ்நாட்டுக்குள் உள்ளூர் விமானக் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது.

வழக்கமாக சுமார் ரூ.5,000 அளவில் இருந்த மதுரை – சென்னை விமானக் கட்டணம் திடீரென ரூ.32,500 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கோவை – சென்னை பயண கட்டணம் ரூ.4,500 இலிருந்து ரூ.11,200 ஆகவும், திருச்சி – சென்னை வழித்தடத்தில் ரூ.4,500 இலிருந்து ரூ.14,000 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் தூத்துக்குடி – சென்னை பயணத்திற்கான கட்டணம் ரூ.5,300 இலிருந்து ரூ.17,000 ஆக அதிகரித்துள்ளது.

இந்த திடீர் உயர்வு காரணமாக அவசரமாக திரும்ப வேண்டிய பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். விமான சேவைகளில் மட்டுமல்லாமல், ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி

MUST READ