Homeசெய்திகள்இந்தியாவெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

-

- Advertisement -

நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் தீர்ப்புவெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்கவும்  போதிய சட்டங்கள் உள்ளன, ஆனால் அதனை செயல்படுத்துவதலேயே தொய்வு உள்ளது. சட்டங்களை உருவாக்குவது என்பது நாடாளுமன்ற, சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்குள்ளானது, மேலும் எந்த முறையில் சட்டம் இயற்றுவது என்பது அதன் அதிகாரத்தின் கீழானது.

எனவே, இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் சட்டத்தை விளக்கலாம், ஆனால் அவை சட்டத்தை இயற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது.

we-r-hiring

மேலும் BNSS சட்டத்தின் கீழ் வெறுப்பு பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய சட்டப்பிரிவுகள் உள்ளன. எனவே இந்த விஷயத்தில் சட்டரீதியான வெற்றிடம் எதுவும் இல்லை. நாங்கள் வழிகாட்டுதல்களை வழங்க மறுத்தாலும், வெறுப்புப் பேச்சு மற்றும் வதந்தி பரப்புதல் தொடர்பான பிரச்சினைகள் நாட்டின் சகோதரத்துவத்தையும் அரசியலமைப்பு ஒழுங்கையும் நேரடியாகப் பாதிக்கின்றன.

எனவே, வெறுப்பு பேச்சு, வதந்தி பரப்புதல் விஷயத்தில் சமூக மாற்றங்களின் அடிப்படையில் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டுவரவோ, அல்லது ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுகின்றனவா என்பதை பரிசீலிப்பது என்பது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

எனவே வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வதந்தி பரப்புதலை தடுக்கவும் புதிய சட்டங்கள் இயற்ற உத்தரவிடக் கோரிய பொதுநலமனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!

MUST READ