தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது என கமலஹாசன் எம்.பி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவா் கமலஹாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமாவில் புது முயற்சிகளுக்குத் தயங்காத துணிச்சல்காரர்; பலரை அறிமுகம் செய்தும் பலருக்குத் திருப்புமுனை ஏற்படுத்தியும் நிலைநிறுத்தியவர்; சாதிக்க விரும்பும் இளம் கலைஞர்களுக்குச் சரணாலயமாக இருந்தவர் இப்படி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர். அன்புத் தந்தையை இழந்து வாடும் தம்பி ஜீவா, தம்பி ரமேஷ் மற்றும் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கமலஹாசன் எம்.பி தெரிவித்துள்ளாா்.
அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் – கமலஹாசன் எம்.பி

