Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு - டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

-

- Advertisement -

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு - டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 119 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்திக்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் அவர்களுக்கு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சந்திப்பிற்கு அனுமதி மறுத்த சம்பவம் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

விசிக (2), காங்கிரஸ் (5), சிபிஐ (2) மற்றும் சிபிஎம் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 119 இடங்களைப் பெற்று பெரும்பான்மையை உறுதி செய்த விஜய், இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஆளுநர் மாளிகையிலிருந்து முறையான அழைப்பு வராததாலும், சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்படாததாலும் விஜய் தனது பனையூர் இல்லத்திற்குத் திரும்பினார்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஆளுநரின் செயல்பாட்டிற்குப் பின்னால் டெல்லி மேலிடத்தின் அழுத்தம் இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். “பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களுக்கும் மேலாக 119 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் தயாராக உள்ளது. அப்படியிருந்தும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேரம் ஒதுக்க மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் தலையீடு இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசை அமையவிடாமல் தடுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.”

ஆளுநர் தரப்பு விளக்கம் என்ன?
ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், ஆதரவு கடிதங்களில் உள்ள கையெழுத்துகளைச் சரிபார்க்கக் கால அவகாசம் தேவைப்படுவதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுமா அல்லது விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பாரா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும். இருப்பினும், ஆளுநரின் இந்தச் செயல்பாடு மத்திய அரசுக்கும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான மோதலை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

MUST READ