ஐபிஎல் 2026 ப்ளே ஆஃப் (Playoffs) மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 20-ஆம் தேதி முதல் துவங்குகிறது. ரூ-பே (RuPay) கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 24 மணி நேர முன்னுரிமை முன்பதிவு வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு (2026) ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ப்ளே ஆஃப் சுற்றுக்கான டிக்கெட் விற்பனை குறித்து முக்கிய அறிவிப்பை BCCI நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை இரவு 7 மணி முதல் தொடங்குகிறது. Qualifier 1 மற்றும் Eliminator போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மே 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் Qualifier 2 மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் மே 22 மற்றும் 23 தேதிகளில் ரசிகர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ http://www.iplt20.com இணையதளம் உள்ளிட்ட தளங்கள் மூலம் ரசிகர்கள் முன்பதிவு செய்யலாம்.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. வழக்கம்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), மும்பை இந்தியன்ஸ் (MI), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு பெரும் ரசிகர் ஆதரவு காணப்பட்டாலும், போட்டிகளின் தரம் மற்றும் சுவாரஸ்யம் குறித்து சில அதிருப்திகள் நிலவுகின்றன.
குறிப்பாக, இந்த சீசனில் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில போட்டிகளில் கடைசி ஓவர் வரை பரபரப்பு நீடித்தாலும், தொடரின் நீளம் அதிகமாக இருப்பது மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமில்லாத ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், ஐபிஎல் போட்டிகளுக்கான ரசிகர் ஆதரவு தொடர்ந்து வலுவாகவே உள்ளது. குறிப்பாக ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் வெளியான சில நிமிடங்களிலேயே விற்றுத் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிப்பட்டியல், போட்டி அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு ரசிகர்கள் IPL அதிகாரப்பூர்வ தளம்-ஐ அணுகலாம்.
”செரிக்க முடியாத கசப்பான மாத்திரை”: 5-வது தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் உருக்கம்!
