Homeசெய்திகள்அரசியல்தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் - காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

-

- Advertisement -

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளாா்.

images (1)

we-r-hiring

தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், தவெக தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் மொத்தம் 23 பேர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி. விஸ்வநாதன் மற்றும் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பி. விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறையும், எஸ். ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளது. அக்கட்சித் தலைவர் காதர் மொய்தீன், பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஷாஜகான் விரைவில் அமைச்சராக பதவியேற்பார் என்று கூறியுள்ளார். அவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், வி.சி.க.வின் நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

MUST READ