Homeசெய்திகள்அரசியல்அதிமுக பிளவு  முதல் தற்காலிக இணைப்பு வரை…பரபரப்பான அரசியல் பின்னனி…

அதிமுக பிளவு  முதல் தற்காலிக இணைப்பு வரை…பரபரப்பான அரசியல் பின்னனி…

-

- Advertisement -

கட்சி தன் வசம் தான் இருக்கிறது என்பதை வேலுமணி தரப்புக்கு நிரூபித்த எடப்பாடி பழனிசாமி. பொதுச்செயலாளராக உள்ள இபிஎஸ்யை மாற்றிவிட்டு பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வர முயற்சி செய்த வேலுமணிக்கு மிகப்பெரிய தோல்வியே கிடைந்துள்ளது. வேலுமணிக்காக, இபிஎஸ் மீது கடுமையான விமர்சனங்களை வைத்த சிவி சண்முகம், இபிஎஸ் தலைமையை ஏற்க மறுத்து, மண்ணிப்பு கோர முடியாது, தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டம்.அதிமுக பிளவு  முதல் தற்காலிக இணைப்பு வரை…பரபரப்பான அரசியல் பின்னனி…

2026 சட்டமன்ற தேர்தல் யாரும் எதிர்பாராத பல நிகழ்வுகளை உள்ளடக்கிய முடிவுகளாக தான் இருந்துள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று அதிமுக உட்கட்சி பிரச்சனை. ஜெயலலிதா மறைந்தது முதல் 9 ஆண்டுகளில் சசிகலா & டிடிவி அணி – ஓபிஎஸ் அணி, இபிஎஸ் & ஓபிஎஸ் – சசிகலா, இபிஎஸ் – ஓபிஎஸ் அணி என சேர்ந்து, பிரிந்து என பல நூடுல்ஸ் போன்ற பல உட்கட்சி சிக்கல்களை சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிந்த மறு தினமே (5ம் தேதி)அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. இபிஎஸ் – எஸ் பி வேலுமண, சிவி சண்முகம் அணி என 2ஆக பிரிந்தது.

we-r-hiring

கட்சியை கைப்பற்றும் முயற்சியில் எஸ் பி வேலுமணி, சி வி சண்முகம், சி விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக செயல்பட தொடங்கினர். இபிஎஸ் மீது கடுமயான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் வேலுமணி, சி வி சண்முகம் தரப்பினர். 11 தேர்தல்களில் தோல்வியை கண்ட பொதுச்செயலாளரை பெற்றுள்ளோம். தகுதியில்லாத தலைவரை பெற்றுள்ளோம், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதனால் பதவியை பறிக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தனர். அதோடு பொதுக்குழை கூட்ட வேண்டும், அதற்காக பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து பெறவும் தீவிரம் காட்டியது வேலுமணி தரப்பு.அதிமுக பிளவு  முதல் தற்காலிக இணைப்பு வரை…பரபரப்பான அரசியல் பின்னனி…

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இபிஎஸ் தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் சி.வி.சண்முகம், வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் பதவிக்காக ஆசைப்பட்டு சென்றுள்ளனர். தங்கள் மாவட்டத்தில் இவர்களை தவிர மற்றவர்கள் யாருமே வெற்றிபெறவில்லை. அமைச்சர் பதவி சுகத்திற்காக தான் தவெக அரசுக்கு ஆதரவாக செயல்படும் துரோகிகள் என குற்றம்சாட்டினர்.

9ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்வு செய்வதாக கடிதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேலுமணி, சிவி சண்முகம் தரப்பினரும் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு கையெழுத்துடன் எஸ் பி வேலுமணி அதிமுக சட்டமன்ற குழு தலைவராகவும், கொறடாவாக சி.விஜயபாஸ்கரும் தேர்வு செய்ய வேண்டும் என கடிதம் சபாநாயகரிடம் வழங்கினர்.

இருதரப்பு கடிதத்தையும் சபாநாயகர் தனது ஆய்வுக்கு உட்படுத்தி முடிவு எடுப்பதாக அறிவித்தார். 13ம் தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வில் தவெகவுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இபிஎஸ் தரப்பில் 22 எம்எல்ஏக்கள் தவெக வுக்கு எதிராக வாக்களித்தனர். இதன்பின் எஸ்.பி. வேலுமணி அணி தான் அதிமுக என தவெக தலைவரும் முதல்வருமான விஜய் நேரடியாக வந்து வாழ்த்து பெற்றார். இதனால் கடும் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக வேலுமணி, சிவி சண்முகம், சி விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 25 சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி பொறுப்புகளை பறித்தார். அவர்களோடு சேர்த்து ஆதரவு அளித்த மாவட்ட செயலாளர்கள் என முக்கிய பொறுப்புகளில் இருந்த மொத்தம் 29 பேரின் பொறுப்புகளை பறித்து, அடிப்படை உறுப்பினராக மட்டுமே வைத்தார் இபிஎஸ். அந்தந்த பொறுப்புகளுக்கு உடனடியாக மாற்று நிர்வாகிகளையும் நியமித்தார்.

அதிமுக பிளவு  முதல் தற்காலிக இணைப்பு வரை…பரபரப்பான அரசியல் பின்னனி…

அதே சமயத்தில் இபிஎஸ் தரப்பில் சபாநாயகரிடம் கட்சி எதிராக செயல்பட்டதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் வேலுமணி தரப்பில் 25 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கடிதம் வழங்கினார். அதேசமயம் தவெக அரசின் முழு அமைச்சரவை பட்டியலும் வந்தது. அதில் தங்கள் பெயர் இடம்பெற்று விடும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த வேலுமணி தரப்பினருக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அமைச்சரவையில் இடம் இல்லை. ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுக அறிக்கை வெளியானது. மண்ணிப்பு கோரி மீண்டும் கட்சியில் இணையலாம் என குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து எஸ் பி வேலுமணி தரப்பில் இருந்த எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்புக்கு அணி மாற தொடங்கினர். அதே நேரத்தில் மரகதம் குமரவேல், ஜெயகுமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா என 4 எம்எல்ஏக்கள் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் வேலுமணி தரப்பு ஆதரவு எண்ணிக்கை 25ல் இருந்து 15 ஆக குறைந்தது.

செவ்வாய்க்கிழமை மாலை பேச்சுவார்த்தை குழு இபிஎஸ் இல்லத்திற்கு வந்து சுமூக பேச்சுவார்த்தை செய்தது. அதில் பறிக்கப்பட்ட கட்சி பொறுப்புகள் மீண்டும் வழங்க வேண்டும், தகுதி நீக்க கடிதம் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், இபிஎஸ் திட்டவட்டமாக பறிக்கப்பட்ட கட்சி பொறுப்புகள் வழங்க முடியாது. தகுதி நீக்க கடிதத்தை வேண்டுமானல் திரும்ப பெறுகிறேன். அதற்கு மண்ணிப்பு கடிதம் வழங்க வேண்டும் என தெரிவித்துவிட்டார். வேறு வழியில்லாமல் சிவி சண்முகத்தை தவிர்த்து 14 சட்டமன்ற உறுப்பினர்களும் இபிஎஸ் க்கு ஆதரவு அளிப்பதாக சபாநாயகரிடம் மனு வழங்கினர். சிவி சண்முகம் மட்டும் இபிஎஸ் பிடிவாத குணம் கட்சிக்கு நல்லதல்ல, அவரது தலைமையை ஏற்க முடியாது என நிர்வாகிகளிடம் கூறிவிட்டு, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக பிளவு  முதல் தற்காலிக இணைப்பு வரை…பரபரப்பான அரசியல் பின்னனி…

இதில் இபிஎஸ்யை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எஸ் பி வேலுமணி தரப்புக்கு தோல்வியிலேயே முடிந்துள்ளது. இபிஎஸ் யிடமே மீண்டும் சரணடைந்த வேலுமணி தரப்பினர் ஆதரவு தெரிவித்து கட்சயில் தொடர்ந்தாலும் கட்சி பொறுப்புகள் இல்லாமல் அவர்களது மாவட்டங்களில் எப்படி செயல்பட முடியும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தங்களது எம்எல்ஏ பதவியை தற்காலிகமாக பாதுகாத்துக்கொள்ளவே இபிஎஸ் ஆதரவு நிலைபாடு எடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதிமுக சட்டப்பேரவையில் தேர்தலில் 47 பேர் வெற்றி பெற்றனர். அதில் 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் தற்போது 43 எம்எல்ஏக்கள் அதிமுகவில் உள்ளனர். சிவி சண்முகம் இன்று ராஜினாமா செய்தால் 42 ஆக அதிமுக எம்எல்ஏக்கள் பலம் குறையும்.

அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…

MUST READ