Homeசெய்திகள்வானிலை21 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் – வானிலை ஆய்வு மையம்!

21 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் – வானிலை ஆய்வு மையம்!

-

- Advertisement -

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், இன்று (ஜூன் 1) தமிழகத்தின் 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.21 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் – வானிலை ஆய்வு மையம்!தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கிணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை நிகழ்வு ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

we-r-hiring

தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களும் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் தகவல்

MUST READ