டெல்லியில் சில பகுதிகளில் அதிகப்பட்ச வெப்பநிலை 114°F (சுமார் 45°C முதல் 46114°C வரை பதிவாகியுள்ளது. இந்த தீவிர வெப்ப அலை (Hearwave) காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தலைநகருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. இன்று அதிகபட்சமாக ரிட்ஜ் (Ridge) பகுதியில் 114°F (சுமார் 45.5°C) வெப்பநிலை பதிவாகி, நகரம் முழுவதும் தகிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அதிரடியான வெப்பநிலை உயர்வால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, சாலைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் வெப்ப அலை தீவிரமாக உணரப்படுகிறது.

இதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் இந்திய வானிலை ஆய்வு மையம் தீவிர வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், அடுத்த சில நாட்களிலும் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்லாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிப்புறச் செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் அதிக அளவில் தண்ணீர், இளநீர் மற்றும் மோர் போன்ற திரவங்களை குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருத்தி ஆடைகள் அணிதல், குடை, தொப்பி மற்றும் சன்கிளாஸ் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கவும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தொடர்ச்சியான வெப்ப அலை காரணமாக மூத்தவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலக் குறைபாடுள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த கடுமையான வெப்பநிலை நிலை தொடரும் நிலையில், டெல்லி மக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.
