தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதியில் உருவாகிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
பிப்ரவாி 12, 13, 14 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் இன்றும், பிப்ரவாி 15 ஆம் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூத்தடத்துடன் காணப்படும். தேனி, விருதுநகா், தென்காசி, நெல்லை, குமாி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று தொிவிக்கப்ட்டுள்ளது. எனவே வெளியில் செல்வோா் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். கையில் குடையை தவறாமல் எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வலுப்பெறும் புயல் சின்னம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


