Homeசெய்திகள்கட்டுரைகலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!

கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!

-

- Advertisement -

கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!

கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!

ஒவ்வொருவரும் தன்னைப் பற்றித் தானே சொல்லிக் கொள்வது, ஒரு வரலாற்று வாக்குமூலமாகச் சில வேளைகளில் அமையும்! அப்படிப்பட்ட ஒரு வாக்குமூலம்தான். கலைஞர் தன்னை “நான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக் காரன்” என்று அறிமுகம் செய்துகொண்டது!

we-r-hiring

ஆனால் அந்த அறிமுகம், அவரைப் பற்றியது மட்டும் இல்லை! தன்னைப் போலவே, தன் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் மானமுள்ள சுயமரியாதைக்காரர்களாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால்தான் தன் ஆட்சிக் காலத்தில், அத்தகைய பல திட்டங்களை அவரால் கொண்டுவர முடிந்தது!

பிச்சைக்காரர்களாகவும், தொழு நோயாளிகளாகவும், தெருவில் நாம் காணும் மனிதர்களை, அவர் ஒரு மறு வாழ்வுத் திட்டத்தின் கீழ், ஓர் இல்லத்திற்குக் கொண்டு வந்தார். இல்லை, அவர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றினார்!

கை ரிக்சா ஒழிப்பு என்பது வெறும் திட்டம் இல்லை. சக மனிதனின் சுயமரியாதையைக் காப்பாற்றும் ஓர் அரிய சிந்தனை!

கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!

1929இல் தந்தை பெரியாரும், 1951இல் அண்ணல் அம்பேத்கரும் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று முழங்கினார்கள்! அதனை 1989இல் தமிழ்நாட்டில் சட்டமாக்கி, பெண்களின் சுயமரியாதையைக் காப்பாற்றியவர் தலைவர் கலைஞர்!

உடல் ஊனமுற்றோர் என்னும் சொல்லே அவர்களைக் காயப்படுத்துகிறது என்பதை உணர்ந்து, 2010இல் இனி அவர்களை “மாற்றுத் திறனாளிகள்” என அழைப்போம் எனக்கூறி, அவர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றியவர் கலைஞர்!

இப்படி இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்!
ஆம், தன்னைப்போலவே பிறரும் தங்கள் மதிப்பை இழந்துவிடாமல் வாழவேண்டும் என்று கருதிய சுய மரியாதைக்காரர்தான் தலைவர் கலைஞர்!

அவர் பிறந்தநாளில், அவரைப் போற்றுவோம், பின்பற்றுவோம்…

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரே நாளில் சரிவை சந்திப்பதில்லை!

MUST READ