மராட்டிய மாநிலத்தில் கோயில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்தில் அமைந்துள்ள அனுமன் கோயிலில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். அப்போது கோயிலில் கட்டப்பட்டு வந்த மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். எதிர்பாராத சம்பவத்தால் அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக மீட்புப் பணிகளை தொடங்கினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நீட் மறுதேர்வில் குளறுபடி…மகாராஷ்டிர மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்…
