- Advertisement -
சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை- ஆளுநர் பேட்டியால் நோட்டீஸ்
தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியிருந்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் 6,7-ம் வகுப்பு மாணவிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும், இதனால் சில சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆளுநர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த சோதனை செய்வது குழந்தைகள் உரிமை மீறல் என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தாமாக முன்வந்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


