தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை, தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வானயம் அறிவித்துள்ளது.
ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பணிபுரியும் ஆசிரியர்களுக்கான டெட் (TET) தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுவிட்டது. தேர்வர்கள் தங்களின் பயனர் ஐடி (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) மூலம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியாத தேர்வர்களுக்காக, ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை சிறப்பு உதவி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த முகாம்கள் மூலம் தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கும், பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுவரை டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களும் கட்டாயம் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய சூழல் உருவானது. ஆசிரியர்களின் வசதியை கருத்தில் கொண்டு, மூன்று சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சட்டப்பேரவையில் தனிமனித துதிபாடல் அதிகமாக உள்ளது: பிரேமலதா ஆதங்கம்
