Homeசெய்திகள்தமிழ்நாடு‘யானை பசிக்கு சோளப்பொறி’ – பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை விமர்சித்த பி.ஆர்.பாண்டியன்

‘யானை பசிக்கு சோளப்பொறி’ – பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை விமர்சித்த பி.ஆர்.பாண்டியன்

-

- Advertisement -

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஏமாற்று நடவடிக்கை என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.‘யானை பசிக்கு சோளப்பொறி’ – பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை விமர்சித்த பி.ஆர்.பாண்டியன்

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு, சிறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நம்பியே விவசாயிகள் ஆதரவு அளித்ததாக அவர் குறிப்பிட்டார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வெளியிடப்பட்ட முதல் அறிவிப்பில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையும், பெரு விவசாயிகளுக்கு ரூ.5,000 வரையும் மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது கட்ட அறிவிப்பில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.75,000 வரையும், அதற்கு மேல் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.35,000 வரையும் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ‘யானை பசிக்கு சோளப்பொறி’ போடுவது போன்றதாக இருப்பதாக பி.ஆர்.பாண்டியன் சாடியுள்ளார். கடந்த காலங்களில் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடிகள், ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே முழுமையாக அமல்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தற்போது தவணை தவணையாக அரைகுறை அறிவிப்புகள் வெளியிடுவது விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம் எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சம்பா சாகுபடிக்கான எதிர்பார்ப்பும் நிச்சயமற்ற சூழலில் உள்ளதால், அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். எனவே, முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மின் கட்டமைப்பை பலப்படுத்த ரூ.15,032 கோடி… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

MUST READ