Homeசெய்திகள்தமிழ்நாடுமின் கட்டமைப்பை பலப்படுத்த ரூ.15,032 கோடி… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

மின் கட்டமைப்பை பலப்படுத்த ரூ.15,032 கோடி… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பழுதுகளை சரி செய்ய 15,058 மின் பணியாளர்களை நியமிக்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.மின் கட்டமைப்பை பலப்படுத்த ரூ.15,032 கோடி… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தவும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநிலம் முழுவதும் ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது ரூ.10,109 கோடி செலவில் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மின் நிலையங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

we-r-hiring

மின்தடை மற்றும் மின் பழுதுகளை விரைவாக சரிசெய்யும் வகையில், கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் மின் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு தரமான சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.மின் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய தேவையான 15,058 மின் பணியாளர்களை நியமிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், மின் துறைக்கு தேவையான தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை ரோந்து பணிகளில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் விநியோக கட்டமைப்பை நவீனப்படுத்தி, மின்தடையற்ற மற்றும் தடையில்லா மின்சார சேவையை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எம்எல்ஏ.க்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்… குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

MUST READ