Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்எல்ஏ.க்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

எம்எல்ஏ.க்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்… குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

-

- Advertisement -

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமை முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.எம்எல்ஏ.க்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

இன்று (ஜூன் 16) மற்றும் நாளை (ஜூன் 17) நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், மூத்த அரசியல் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றச் செயலக அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

we-r-hiring

சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பும் நடைமுறை, கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள், அவை மரபுகள் மற்றும் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதியை திறம்பட பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

முகாமைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சட்டப்பேரவையின் மாண்பைக் காப்பதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? – அண்ணாமலை கேள்வி

MUST READ