Homeசெய்திகள்தமிழ்நாடுபண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..

பண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..

-

- Advertisement -

பண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..
கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது இரு தரப்பினரிடையேயான மோதல் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி -நெய்வேலி சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி முன்பு சாலையில் இரண்டு இளைஞர்களை மற்றொரு தரப்பு நான்கு இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் காட்சியை பேருந்தில் பயணம் செய்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த பரபரப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கல்லூரிக்கு மிக அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாலும், மோதலில் ஈடுபட்டவர்கள் இளைஞர்களாக இருந்ததாலும், அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்றும், பண்ரூட்டியில் இரட்டைகொலை நிகழ்ந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வந்தன.

we-r-hiring

இந்நிலையில், காடாம்புலியூர் காந்தி நகரை சேர்ந்த அலெக்ஸ், அமிர்தலிங்கம் ஆகிய இரண்டு இளைஞர்களும், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, கௌதம், மோகன் உள்ளிட்ட மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களும் நேற்று முன்தினம் மணமேடு பாரில் மது அருந்தி உள்ளனர். அப்போது இளைஞர்களிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் முன்விரோதம் காரணமாக, அண்ணா பொறியியல் கலைக்கல்லூரி அருகே இளைஞர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டுள்ளனர். இதில் அலெக்ஸ் மற்றும் அமிர்தலிங்கத்தை கடுமையாக தாக்கிவிட்டு இரண்டு இருசக்கர வாகனங்களில் 4 இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.
பண்ரூட்டி தாக்குதல்இதனை அவ்வழியாகச் பேருந்தில் சென்றவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதலில் அலெக்ஸ், அமிர்தலிங்கம் ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காடாம்புலியூர் போலீசார் , தாக்குதலில் ஈடுபட்ட கீழ்மாம்பட்டு சூர்யா, ,மோகன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றன இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

MUST READ