Homeசெய்திகள்தமிழ்நாடுகூட்டணிக்காக நீதி பலிகடாவா?” – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் கருத்துக்கு வானதி...

கூட்டணிக்காக நீதி பலிகடாவா?” – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் கருத்துக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் தொடர்பாக, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பதற்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கூட்டணிக்காக நீதி பலிகடாவா?” – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் கருத்துக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதைவிட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றுவதில்தான் காங்கிரஸ் அக்கறை காட்டுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள கருத்தில், அருள் விக்னேஷ் மீதான புகாரில் கைது நடவடிக்கை தேவையில்லை என கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நிலையில், தற்போது மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யும் இதே நிலைப்பாட்டை எடுத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக ஒட்டுமொத்தக் கட்சியின் சுயமரியாதையையும் அடகு வைத்து, தவெக-வின் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுப்பதுதான் தமிழக காங்கிரஸின் அரசியலா என்றும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்துள்ள பெண்ணுக்கு ஆதரவாக நின்று நீதி பெற்றுத் தருவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்றும், கைது நடவடிக்கை கூடாது என முன்கூட்டியே கருத்துத் தெரிவித்து ஆதரவளிப்பது முறையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவரைக் கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதைச் சட்டமும், காவல்துறையும், நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், புகாரின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டி, பாதிக்கப்பட்டவரின் நீதிக்கான குரலை அரசியல் காரணங்களுக்காக நசுக்க முயல்வதை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார்.

அருள் விக்னேஷ் விவகாரத்தில் கைது நடவடிக்கை கட்டாயம் தேவை என்றும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ள வானதி சீனிவாசன், கூட்டணி தர்மத்தைவிடப் பெண்களின் கண்ணியத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்: குற்றத்தை மறைத்த தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் புகார்!

MUST READ