Homeசெய்திகள்தமிழ்நாடுகாவல் நிலையத்திற்குள் கணபதி ஹோமம் – சர்ச்சையைத் தொடர்ந்து ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்!

காவல் நிலையத்திற்குள் கணபதி ஹோமம் – சர்ச்சையைத் தொடர்ந்து ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்!

-

- Advertisement -

காவல் நிலைய வளாகத்திற்குள் யாகம் நடத்திய விவகாரம் – ஆய்வாளர் சுரேஷ் பாபு ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்!காவல் நிலையத்திற்குள் கணபதி ஹோமம் – சர்ச்சையைத் தொடர்ந்து ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 45 நாட்களுக்கும் மேலாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், சத்தியமங்கலம் காவல் நிலைய வளாகத்திற்குள் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காவல் நிலைய வளாகத்திலேயே சிறப்பு யாகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. காவல் நிலையத்திற்குள் யாகம் நடத்தியது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் பாபுவை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை உயரதிகாரிகள் இன்று (நவம்பர் 26) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 43 நாட்களாகியும் துப்பு கிடைக்கவில்லை – கர்நாடகாவில் வேலை செய்யும் இளைஞரிடம் 3-வது முறையாக சிபிசிஐடி விசாரணை!

MUST READ