Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்னை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள்; திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரை மணி நேரத்தில் தீர்ப்பேன்” – சீமான்!

என்னை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள்; திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரை மணி நேரத்தில் தீர்ப்பேன்” – சீமான்!

-

- Advertisement -

பணநாயகத் தேர்தலில் தான் நான் தோற்றேன்; மக்கள் மன்றத்தில் அல்ல – அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் சீமான் ஆவேசப் பேச்சு!என்னை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள்; திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரை மணி நேரத்தில் தீர்ப்பேன்” – சீமான்!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது தேர்தல் தோல்வி குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் தேர்தல் களத்தில் மட்டுமே நான் தோல்வியடைந்துள்ளேன்; மக்கள் மன்றத்தில் அல்ல” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் பொதுமேடைகளில் இளைஞர்கள் துணிச்சலுடன் தலைவர் பிரபாகரனின் பெயரையும் வரலாற்றையும் பேசும் சூழலைத் தாம் உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஆங்கில மோகம் நிறைந்த சூழலில் தனது கட்சியைச் சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் தெருவெங்கும் தூய தமிழில் பேசும் மாற்றத்தை உருவாக்கியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

“இவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கிய நான் எங்கே தோற்றுவிட்டேன்?” என்று கேள்வி எழுப்பிய சீமான், தேர்தலில் போட்டியிடும் அனைவரும் தங்கள் மண்ணின் பிள்ளைகள்தான் என்றும், லட்சியத்தில் உறுதிகொண்டவர்களை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் கூறினார்.

அரை மணி நேரத்தில் பிரச்சினையைத் தீர்ப்பேன் – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீமான்

தனது பேச்சு பாணி குறித்த விமர்சனங்களுக்கும் சீமான் பதிலளித்தார். “இவ்வளவு சத்தமாகக் கத்திப் பேசியே உங்கள் காதுகளில் எதுவும் விழவில்லை; இதில் மென்மையாகப் பேசினால் என்ன நடக்கப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஏன் பேசவில்லை என எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அந்த விவகாரம் குறித்துத் தாம் ஏற்கெனவே பேசியிருந்தபோதும், பலரும் அதைக் கவனிக்காமல் மௌனமாக இருந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், திருப்பரங்குன்றம் விவகாரம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக நீடிப்பதைச் சுட்டிக்காட்டிய சீமான், “ஒருமுறை என்னிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்; ஆண்டுதோறும் நீடிக்கும் இந்தப் பிரச்சினையை வெறும் அரை மணி நேரத்தில் நிரந்தரமாகத் தீர்த்து முடித்திருப்பேன்” என்று பேசினார்.

தேர்தல் வெற்றி, தோல்வி குறித்த விமர்சனங்கள் மற்றும் திருப்பரங்குன்றம் விவகாரம் எனப் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் சீமான் ஆவேசமாகப் பேசியது கவனம் பெற்றுள்ளது.

நான் பொதுவேட்பாளரா? யார் சொன்னது? – சீமான் அதிரடி கேள்வி!

MUST READ