Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தின் 1,076 கி.மீ. கடற்கரையில் ‘ஆபரேஷன் சீ விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை – கடற்படை, கடலோர...

தமிழகத்தின் 1,076 கி.மீ. கடற்கரையில் ‘ஆபரேஷன் சீ விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை – கடற்படை, கடலோர காவல் படையினர் பங்கேற்பு!

-

- Advertisement -

தமிழகத்தின் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ‘ஆபரேஷன் சீ விஜில்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.தமிழகத்தின் 1,076 கி.மீ. கடற்கரையில் ‘ஆபரேஷன் சீ விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை – கடற்படை, கடலோர காவல் படையினர் பங்கேற்பு!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலான 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள தமிழகக் கடற்கரைப் பகுதியில் இந்தப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. கடற்படை, இந்தியக் கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமம் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரிவு உள்ளிட்ட தமிழக காவல்துறையினர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த ஒத்திகை, நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கடல் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பது போன்ற சூழல் உருவாக்கப்பட்டு, அதனைப் பாதுகாப்புப் படையினர் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதைச் சோதிக்கும் வகையில் ஒத்திகை நடைபெறுகிறது.

இதன்படி, பயங்கரவாதிகள் போலக் கடல் வழியாக ஊடுருவ முயலும் காவல்துறையினரை, கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கண்டறிந்து பிடிப்பார்கள்.

கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றைச் சோதிக்கும் வகையில் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் – அர. சக்கரபாணி கோரிக்கை!

MUST READ