Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க 2-வது மாநாடு – முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது!

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க 2-வது மாநாடு – முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது!

-

- Advertisement -

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 2-வது வெற்றித் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்கம் – ரூ.58,214 கோடி முதலீட்டில் 78 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க 2-வது மாநாடு – முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது!

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 2-வது வெற்றித் தமிழ்நாடு முதலீடு மற்றும் திட்டச் செயலாக்க மாநாடு கோவளத்தில் தொடங்கியுள்ளது.

இந்த மாநாட்டில் ரூ.58,214 கோடி மதிப்பிலான 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 65,786 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முதலீட்டுத் திட்டங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மாநாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனிடையே, மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற மின்சார வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், வாகனங்களின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நிறுவனப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார்.

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்ற முதல் வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் ரூ.67,452 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் மூலம் 1,06,998 வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது நடைபெறும் 2-வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேலும் ரூ.58,214 கோடி முதலீடுகளை ஈர்க்கவும், 65,786 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்கள்: ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த ஆணை வழங்கியது தமிழக அரசு!

MUST READ