spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏ.டி.எம். கொள்ளை வழக்கு: பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளியை துப்பாக்கி முனையில் கைது செய்த...

ஏ.டி.எம். கொள்ளை வழக்கு: பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளியை துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை!

-

- Advertisement -

 

ஏ.டி.எம். கொள்ளை வழக்கு: பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளியை துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை!
Video Crop Image

திருவண்ணாமலை ஏ.டி.எம். மைய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை காவல்துறையினர், ஹரியானாவில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

we-r-hiring

தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்பு

கடந்த பிப்ரவரி மாதம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏ.டி.எம். மையங்களில் 72.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்திய தனிப்படை காவல்துறையினர், சுமார் 8 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் ஹரியானா மாநிலத்தின் ஆரவல்லி மலை பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை காவல்துறையினர் ஆரவல்லி மலைத் தொடரில் முகாமிட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியிருந்த ஆசிஃப் ஜாவேத்தை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதி

அவரிடம் திருவண்ணாமலை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் 20 லட்சம் ரூபாய் ரொக்கம், மூன்று கார்கள், ஒரு கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

MUST READ