Homeசெய்திகள்தமிழ்நாடுபுழல் சிறையில் புதிய ‘டி-ஷர்ட்’ தயாரிப்புப் பிரிவு: சிறைத்துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி...

புழல் சிறையில் புதிய ‘டி-ஷர்ட்’ தயாரிப்புப் பிரிவு: சிறைத்துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்

-

- Advertisement -

சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் தொழிற்திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, சென்னை புழல் மத்திய சிறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘டி-ஷர்ட்’ (T-Shirt) தயாரிப்புப் பிரிவை சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

புழல்
​ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3234 (Rotary International District 3234) அமைப்பின் சார்பில், சிறைத்துறையுடன் இணைந்து இந்த நிலையான வாழ்வாதாரத் தொழிற்திட்டம் சிறை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

we-r-hiring

சீர்திருத்தமே முதன்மைக் கோட்பாடு:
​இப்புதிய பிரிவைத் தொடங்கி வைத்துச் சிறைத்துறை இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் பேசியதாவது:
“தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் முதன்மைக் கோட்பாடு என்பது, சிறைவாசிகளை வெறும் அடைத்து வைப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. அதையும் தாண்டி, சிறைச்சாலை என்பது சீர்திருத்தம், மறுவாழ்வு மற்றும் மனமாற்றத்திற்கான ஒரு புகலிடமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

​தமிழகத்தில் உள்ள 125 சிறைகளில் நாள்தோறும் 22,000-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி, சமூகத்துடன் வெற்றிகரமாக மீண்டும் இணைந்து வாழ்வதை உறுதி செய்வது நமது கடமையாகும். இன்று ஒரு சிறைவாசியின் கைகளில் வழங்கப்படும் நடைமுறை சார்ந்த தொழில் திறன் தான், நாளை அவர் நேர்மையான, கண்ணியமான வாழ்வாதாரத்தைப் பெற்று வாழ வழிவகுக்கும்.”

​வேலைவாய்ப்புத் திறன் அதிகரிக்கும்:
​புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த டி-ஷர்ட் தயாரிப்புப் பிரிவு, சிறைவாசிகளுக்கு வணிக ரீதியிலான நவீன ஆடை தயாரிப்புத் திறன்களைக் கற்றுக்கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், அவர்கள் சிறையில் இருக்கும் காலத்திலேயே முறையான வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் வழங்குவதுடன், விடுதலையான பிறகு வெளிச்சந்தையில் தையல் மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெருமளவில் அதிகரிக்கும்.

இத்திட்டத்தைச் சிறப்பான முறையில் புழல் மத்திய சிறையில் செயல்படுத்திய சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைச் சிறைத்துறைத் தலைவர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டி வாழ்த்தினார்.

MUST READ