Homeசெய்திகள்தமிழ்நாடுத.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு: செந்தில் பாலாஜி, சகோதரருக்கு போலீஸ் சம்மன் – தந்தையிடம்...

த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு: செந்தில் பாலாஜி, சகோதரருக்கு போலீஸ் சம்மன் – தந்தையிடம் நேரடியாக ஒப்படைப்பு

-

- Advertisement -

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியைச் சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கில், கோவை தெற்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்தச் சம்மன் இன்று அவர்களது தந்தையிடம் நேரில் வழங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

we-r-hiring

தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்மன்:
சதித் திட்டம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் சென்னை திருவல்லிக்கேணி போலீசார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவரையும் வரும் ஜூலை 6ஆம் தேதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதற்கான சம்மனை இன்று செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு நேரில் சென்ற போலீசார், அவரது தந்தை வேலுச்சாமியிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளனர்.

பின்னணி என்ன?
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (45) என்பவர் ஐ.பி.டி.எஸ். (IBDS) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் (45), சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் (40) ஆகியோரும் இணைந்து த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களை (M.L.A.) தங்கள் பக்கம் இழுப்பதற்காகப் பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

த.வெ.க. எம்.எல்.ஏ. புகார்:
இது தொடர்பாகக் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாகக் களமிறங்கிய போலீசார், திருநாவுக்கரசு உள்ளிட்ட எட்டுப் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரூ.180 கோடி பேரம்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்கும் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பது அம்பலமானது.

பிரம்மாண்ட பேரம்:
த.வெ.க. ஆட்சியைச் சதி செய்து கவிழ்க்க, எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக மொத்தம் 180 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட அதிர்ச்சித் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஜூலை 6ஆம் தேதி செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரிடம் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாகப் பெரும் அரசியல் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ