Homeசெய்திகள்மாவட்டம்தரையிறங்க முடியாமல் வானில் சுற்றிய விமானங்கள்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

தரையிறங்க முடியாமல் வானில் சுற்றிய விமானங்கள்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

-

- Advertisement -

மதுரை விமான நிலையப் பகுதியில் திடீரென ஏற்பட்ட அதிக காற்று அழுத்தம் மற்றும் மோசமான வானிலை மாற்றம் காரணமாக, நவி மும்பை மற்றும் சென்னையில் இருந்து வந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானங்கள்

we-r-hiring

மூன்று முறை வட்டமடித்த விமானங்கள்:

மதுரை விமான நிலைய ஓடுதளப் பாதையில் பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை நிலவியதால், விமானங்களை பாதுகாப்பாகத் தரையிறக்க முடியாத சூழல் உருவானது. இதன் காரணமாக, மதுரையை வந்தடைய வேண்டிய இரண்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் மூன்று முறை வட்டமடித்துக் கொண்டே இருந்தன.

பயணிகள் விபரம்:

  • நவி மும்பையில் இருந்து பகல் 1:25 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு மதியம் 3:25 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம், மோசமான வானிலையால் சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் மூன்று முறை வட்டமடித்தது. இந்த விமானத்தில் மொத்தம் 179 பயணிகள் பயணம் செய்தனர்.

  • இதேபோல், சென்னையில் இருந்து மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு, மதுரை விமான நிலையத்திற்கு மாலை 3:35 மணிக்கு தரையிறங்க வேண்டிய இண்டிகோ விமானமும் காற்றழுத்தம் காரணமாகத் தரையிறங்க முடியாமல் வானில் மூன்று முறை வட்டமடித்தது.

அமைச்சர் விமானமும் தாமதம்:

சென்னையிலிருந்து மதுரை வந்த இண்டிகோ விமானத்தில் தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் உட்பட 166 பயணிகள் பயணம் செய்தனர். மோசமான காற்றழுத்தம் காரணமாக அமைச்சர் நிர்மல் குமார் வந்த இந்த விமானமும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமான நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

MUST READ