Homeசெய்திகள்சென்னைநண்பன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நிமிடம்…விசைப்படகிலேயே உயிர் துறந்த மீன்பிடி ஓட்டுநர்!

நண்பன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நிமிடம்…விசைப்படகிலேயே உயிர் துறந்த மீன்பிடி ஓட்டுநர்!

-

- Advertisement -

​நண்பன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த விசைப்படகு ஓட்டுநர், படகிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னை மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நண்பன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நிமிடம்…விசைப்படகிலேயே உயிர் துறந்த மீன்பிடி ஓட்டுநர்!

​சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (46). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர், முதலில் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

we-r-hiring

​அதிர்ச்சியில் உறைந்த நண்பன்
​அதே பெரிய குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் (47) என்பவர் விசைப்படகு ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடலில் மீன்பிடித்துவிட்டு காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்குக் கரை திரும்பினார். அப்போது, தனது ஆருயிர் நண்பன் பிரகாஷ் உயிரிழந்த செய்தியைக் கேட்டு, அவரது புகைப்படத்தையும் பார்த்துள்ளார். ​நண்பனின் மறைவுச் செய்தியைத் தாங்க முடியாமல் கடும் அதிர்ச்சியடைந்த ஏகாம்பரம், துறைமுகத்தில் நின்றிருந்த விசைப்படகிலேயே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

​போலீஸ் விசாரணை
​இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காசிமேடு மீன்பிடித் துறைமுகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏகாம்பரத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ​நண்பன் மறைந்த துக்கம் தாங்காமல் மற்றுமொரு நண்பரும் உயிரிழந்த இச்சம்பவம் எண்ணூர் மற்றும் காசிமேடு பகுதி மீனவர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தூருக்கு மாற்று இடம் கேட்கவில்லை: திமுக எம்.பி கேள்விக்கும் தவெக அரசுக்கும் ஒன்றிய அரசு பதில்!

MUST READ