Homeசெய்திகள்தமிழ்நாடு“நீதிக்கட்சி, காமராஜர், எம்.ஜி.ஆர் வழியில் பசி போக்கும் பணி!”: முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்...

“நீதிக்கட்சி, காமராஜர், எம்.ஜி.ஆர் வழியில் பசி போக்கும் பணி!”: முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்

-

- Advertisement -

நீதிக்கட்சி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழியில், ஏழை எளிய மக்களின் பசி போக்கும் பணிக்கு முதலமைச்சர் விஜய் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.“நீதிக்கட்சி, காமராஜர், எம்.ஜி.ஆர் வழியில் பசி போக்கும் பணி!”: முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்

750-வது நாள் அன்னதான நிகழ்வு
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு வன்னியர் தலித் கூட்டமைப்பு சார்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில் தொடர்ந்து 750-வது நாளாக அன்னதான நிகழ்வு நடைபெற்றது. இச்சிறப்பு நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கி அன்னதானத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

we-r-hiring

விளம்பரமின்றிச் செய்த நற்பணிகள்
நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது, “நீதிக்கட்சி காலத்தில் வித்திடப்பட்ட உணவுத் திட்டம், பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய சத்துணவுத் திட்டம் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க வரிசையில் முதலமைச்சர் விஜய் செயலாற்றி வருகிறார். அரசியல் கட்சி தொடங்குவதற்கும், ஆட்சிக்கு வருவதற்கும் முன்பிருந்தே, தனது மக்கள் இயக்கம் மூலமாகச் சொந்தச் செலவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் காலை உணவுத் திட்டம், பால் மற்றும் பிரெட் வழங்கும் திட்டங்களை விளம்பரமின்றி அமைதியாக நடத்தி வந்தவர் முதலமைச்சர் விஜய். ஏழை எளியோரின் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகவும் அவர் தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வந்துள்ளார்.”  என ஜே.சி.டி. பிரபாகர், சபாநாயகர் தெரிவித்துள்ளாா்.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
முந்தைய அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பதற்காக அதைக் கைவிடாமல், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தியவர் முதலமைச்சர் விஜய் என்று சபாநாயகர் சுட்டிக்காட்டினார். சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நன்மை சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் அத்திட்டத்தை அவர் மேலும் விரிவுபடுத்தியுள்ளார் என்றும் பாராட்டு தெரிவித்தார்.

பசி போக்கும் அறமும் சமூக நல்லிணக்கமும்
 “தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளையும், இயேசுநாதர் ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களின் பசியைப் போக்கிய வேதாகம நிகழ்வையும் சுட்டிக்காட்டிய சபாநாயகர், பசியோடு வருபவருக்கு உணவளிப்பதே உலகிலேயே மிகச் சிறந்த அறம் என்று வலியுறுத்தினார். இருவேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து, சமுதாயத்தில் அமைதியையும் இணக்கத்தையும் பேணும் வகையில் நற்பணிகளை முன்னெடுத்து வரும் ‘தமிழ்நாடு வன்னியர் தலித் கூட்டமைப்பின்’ இந்த முயற்சியைப் பாராட்டித் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இரண்டு சமூகங்களை ஒன்றிணைத்துச் சமூகச் சமாதானத்தையும் ஏழை எளியோருக்கான நற்பணிகளையும் தொடர்ந்து 750 நாட்களாகச் செய்து வரும் இந்த அமைப்பின் முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

“ஆளுங்கட்சி நிழலில் இருப்பதால் திருமாவளவன் எதை வேண்டுமானாலும் பேசுவார்!”: அதிமுக தளவாய் சுந்தரம் அதிரடி சாடல்

MUST READ