Homeசெய்திகள்தமிழ்நாடு"இது சினிமா இல்ல; தியேட்டரில் அழுது சீன் போடாதீங்க!" – பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!

“இது சினிமா இல்ல; தியேட்டரில் அழுது சீன் போடாதீங்க!” – பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!

-

- Advertisement -

“இது சினிமா கிடையாது சீன் போடுவதற்கும், ரீல்ஸ் போடுவதற்கும், போட்டோ ஷூட் எடுப்பதற்கும்; இது பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை! ரீல் ஹீரோக்கள், ரியல் ஹீரோவாக மாற வேண்டும் என்றால் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!” எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசை மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்."இது சினிமா இல்ல; தியேட்டரில் அழுது சீன் போடாதீங்க!" – பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!

விலைவாசி உயர்வு, லாக்-அப் மரணங்கள் மற்றும் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மீது தேமுதிக கடும் தாக்குதல்!
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை நேரில் சந்தித்துத் தனது விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது,

we-r-hiring

“தியேட்டரில் உட்கார்ந்து அழுவது நிர்வாகம் ஆகாது”
“தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து ஓட்டுப்போட்ட மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அரசு அமைந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கூட இன்னும் தீர்வு காணப்படவில்லை. அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு அரிசியின் விலை டன்னுக்கு ₹15,000 வரை உயர்ந்துள்ளது. சாமானிய மக்கள் நம்பியிருக்கும் அரிசியின் விலையே இவ்வளவு உயர்ந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? சினிமா பார்த்துக் கொண்டு திரையரங்கில் உட்கார்ந்து அழுது சீன் போடுவது அரசு நிர்வாகம் கிடையாது. பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

லாக்-அப் மரணங்களுக்குக் கடும் கண்டனம்
தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் தொடர்ச்சியாக லாக்-அப் மரணங்கள் நிகழ்வது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், “விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை அடித்துக் கொலை செய்ய எந்தச் சட்டத்திலும் இடமில்லை. தவறு செய்தவர்களைச் சட்டப்படி விசாரித்து நீதிமன்றத்திற்குத் தான் அனுப்ப வேண்டும். அதை விடுத்துக் காவல் நிலையங்களிலேயே உயிரைப் பறிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது,”என்று கொதித்தெழுந்தார்."இது சினிமா இல்ல; தியேட்டரில் அழுது சீன் போடாதீங்க!" – பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!

“மின்கட்டணக் குறைப்பு வாக்குறுதி என்னாச்சு?”
“மின் கட்டணத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், இன்று மின்சாரமே பல இடங்களில் இல்லாத நிலையிலும், மின் கட்டணம் மட்டும் மிக அதிகளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. ‘மாற்றம்’ எனக் கூறி ஆட்சிக்கு வந்தார்கள், ஆனால் மக்களுக்கான எந்தவித நன்மையும் ஏற்படவில்லை.”

நீட் தேர்வு விவகாரம் – மத்திய அமைச்சருக்கு கோரிக்கை
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்துப் பேசுகையில், நீட் தேர்வில் குளறுபடிகளும் தவறுகளும் நடந்திருப்பது முழுமையாக நிரூபணமாகியுள்ளது. மாணவர்கள் வைக்கும் நியாயமான கோரிக்கையை ஏற்று மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம், அதில் தவறில்லை. அல்லது குறைந்தபட்சம் மாணவர்களிடம் மன்னிப்பாவது கேட்க வேண்டும். மத்திய அரசு எதுவுமே செய்யாமல் அமைதி காப்பதால்தான் மாணவர்கள் வீதியில் இறங்கித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வு விவகாரத்தில் தேமுதிக என்றும் மாணவர்களுடனும் மக்கள் பக்கமுமே நிற்கும் எனப் பிரேமலதா விஜயகாந்த் உறுதிபடத் தெரிவித்தார்.

காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம்!

MUST READ