Homeசெய்திகள்தமிழ்நாடுமுதுகெலும்பு அறுவை சிகிச்சையில் அதிரடி தொழில்நுட்பங்கள்! சென்னையில் 4 நாட்கள் நடக்கும் பிரம்மாண்ட பன்னாட்டு மாநாடு!

முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் அதிரடி தொழில்நுட்பங்கள்! சென்னையில் 4 நாட்கள் நடக்கும் பிரம்மாண்ட பன்னாட்டு மாநாடு!

-

- Advertisement -

கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய இந்தச் சர்வதேச மாநாடு, வரும் ஜூலை 26-ஆம் தேதி வரை 4 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.600-க்கும் மேற்பட்ட சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு – 4 நாட்கள் தீவிரக் கலந்துரையாடல்!முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் அதிரடி தொழில்நுட்பங்கள்! சென்னையில் 4 நாட்கள் நடக்கும் பிரம்மாண்ட பன்னாட்டு மாநாடு!

முதுகெலும்பு மருத்துவச் சங்கத்தின் (MISSAB) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பன்னாட்டு மாநாடு, இந்த ஆண்டு ஆசிய முதுகெலும்பு அறுவை சிகிச்சை சங்கத்துடன் இணைந்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கோலாகலமாகத் தொடங்கியது.

we-r-hiring

குத்துவிளக்கேற்றிச் சிறப்புத் தொடக்கம்
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக இன்று நடைபெற்ற தொடக்க விழாவில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமக்கோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாநாட்டை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர். வெங்கடாசலம் பங்கேற்று, மாநாட்டில் கலந்துகொண்ட பன்னாட்டு மருத்துவ நிபுணர்களைக் கௌரவித்துச் சிறப்பித்தார்.முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் அதிரடி தொழில்நுட்பங்கள்! சென்னையில் 4 நாட்கள் நடக்கும் பிரம்மாண்ட பன்னாட்டு மாநாடு!

600-க்கும் மேற்பட்ட சர்வதேச நிபுணர்கள் பங்கேற்பு
இம்மாநாட்டில் இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளிலிருந்தும் 600-க்கும் மேற்பட்ட முன்னணி முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறையில் அறிமுகமாகியுள்ள அதிநவீனத் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிநவீனச் சிகிச்சைகள், குறைந்த காயங்களுடன் செய்யப்படும் ‘மினிமலி இன்வேசிவ்’ அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் இத்துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய முன்னேற்றங்கள் குறித்துச் சர்வதேச நிபுணர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் அதிரடி தொழில்நுட்பங்கள்! சென்னையில் 4 நாட்கள் நடக்கும் பிரம்மாண்ட பன்னாட்டு மாநாடு!

எனவே, முதுகெலும்பு சிகிச்சைத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை இந்திய மருத்துவர்கள் அறிந்து கொள்ளவும், சர்வதேச அளவிலான மருத்துவ அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளவும் இம்மாநாடு ஒரு மிக முக்கியக் களமாக அமைந்துள்ளதாக இதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

“எல்லாத் தேர்விலும் பிழை செய்கிறீர்கள்… இப்போது உங்கள் தேர்வுத்தாளை மாணவர்கள் திருத்துகிறார்கள்!” – மத்திய அரசைச் சாடிய சு.வெங்கடேசன் எம்.பி.!

MUST READ