Homeசெய்திகள்அரசியல்"சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க!" – விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!

“சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க!” – விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!

-

- Advertisement -

“தமிழக அரசின் செயல்பாடு என்பது ரீல்ஸ் போடுவதோ, சீன் போடுவதோ, போட்டோ சூட்டோ கிடையாது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த விஷயம்” என்று கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

பிரேமலதா

we-r-hiring

“தியேட்டரில் உட்கார்ந்து அழுதால் போதாது!”

“சினிமா பார்த்துவிட்டு, தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு சீன் ஓட்டுவது அரசு கிடையாது. இன்று வரை காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு உறுதியாகத் தெரிவித்து வருகிறது. ஆனால், நமது அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஜூலை மாதம் முடியும் தருவாயிலும் இதுவரை மழை பெய்யவில்லை. விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் தமிழகம் செழிப்பாக இருக்கும். எனவே, நிலவி வரும் பஞ்சம் மற்றும் விலைவாசி உயர்வில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.”

தொடரும் லாக்கப் மரணங்கள் குறித்துக் கேள்வி:

“தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாகக் காவல் மரணங்கள் (லாக்கப் மரணங்கள்) நடந்து வருகின்றன. காவல்துறையை மக்களைப் பாதுகாப்பதற்காகவே வைத்துள்ளோம்; அவர்களை அடித்துக் கொல்வதற்காக அல்ல.”

“ரீல் ஹீரோ ரியல் ஹீரோவாக மாற வேண்டும்!”

“ரீல் ஹீரோவாக இருப்பவர் ரியல் ஹீரோவாக மாற வேண்டும் என்றால், தேர்தலின் போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆட்சிகள் மாறியும் மக்களுக்கான புதிய மாற்றம் எதுவுமே இங்கு நிகழவில்லை” என அவர் விமர்சித்துப் பேசினார்.

அடையாறு எஸ்பிஐ வங்கியில் ரகளை! மேலாளரின் கன்னத்தில் அறைந்த கயல்விழி… அலறிய ஊழியர்கள்!

MUST READ