சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் நாளை முதல் அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி வேலை நிமித்தமாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதிய கட்டண உயர்வின் விவரங்கள் பின்வருமாறு:
கார், ஜீப், வேன்: ஒரு முறை சென்று வர ரூ.80-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (ஒன்றுக்கு மேற்பட்ட முறை செல்பவர்களுக்கான கட்டணம் மற்றும் மாத பாஸ் கட்டணம் ரூ.50 முதல் ரூ.360 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது).
இலகுரக வணிக வாகனங்கள்: ஒருமுறை செல்ல ரூ.80-லிருந்து ரூ.90 ஆகவும், சென்று வர ரூ.130-லிருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் ட்ரக் (பேருந்துகள்/லாரிகள்): ஒருமுறை செல்ல ரூ.185-லிருந்து ரூ.190 ஆகவும், சென்று வர ரூ.275-லிருந்து ரூ.285 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் (டாராஸ் போன்றவை): ஒருமுறை செல்ல ரூ.200-லிருந்து ரூ.205 ஆகவும், சென்று வர ரூ.300-லிருந்து ரூ.310 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
4 முதல் 6 ஆக்ஸில் கனரக வாகனங்கள்: ஒருமுறை செல்ல ரூ.285-லிருந்து ரூ.295 ஆகவும், சென்று வர ரூ.430-லிருந்து ரூ.445 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் (Oversize vehicles): ஒருமுறை செல்ல ரூ.350-லிருந்து ரூ.360 ஆகவும், சென்று வர ரூ.525-லிருந்து ரூ.540 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் கட்டணத் திருத்தத்தின் அடிப்படையிலேயே இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் கட்டண உயர்வு லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

