தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சமூக வலைதள விமர்சனங்களுக்கு, நடிகர் தனுஷ் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.


திருவள்ளூரில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தின் ரத்த தான முகாமில் கலந்துகொண்டு பேசிய அவர், இதற்குக் பதிலளித்துப் பேசியதாவது:
“‘ராயன்’ படத்துக்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த ஆண்டு அதைவிடத் தகுதியான படங்கள் நிறைய இருந்ததாகக் கூறி, அந்தப் படங்களின் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அவர்களின் கருத்துகளை நான் முழுமையாக மதிக்கிறேன்.
ஆனால், ‘அது ஒரு கனாக்காலம்’ படத்துக்காக எனக்கு நிச்சயமாக விருது கிடைக்கும் என்று சொன்னார்கள்; கிடைக்கவில்லை. ‘புதுப்பேட்டை’, ‘3’, ‘மயக்கம் என்ன’, ‘மரியான்’, ‘வடசென்னை’ போன்ற படங்களுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்றார்கள். இப்போது ‘ராயன்’ குறித்துக் கேள்வி கேட்பவர்கள், அன்று ஏன் கேள்வி கேட்கவில்லை?
சில விஷயங்கள் நாம் எவ்வளவு முயன்றாலும் கிடைக்காது, தானாகத்தான் அமையும். அந்தப் படங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும் அதில் எங்களுடைய உழைப்பு உண்மையானது. ஒரு தமிழனாக எனக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அதனால் தட்டிவிடாமல் தட்டிக்கொடுங்கள்!”
முன்னதாக, தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அந்தப் படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் ரயிலில் அதிர்ச்சி: பயணியின் உணவு தட்டில் கிடந்த பசை ஜெல் பேக்!
