Homeசெய்திகள்திமுக, அதிமுகவை வீழ்த்திய விஜய் ஆட்சி.. "ஆனால் நடந்தது இதுதான்!".. போட்டு உடைத்த ஜேம்ஸ் வசந்தன்!

திமுக, அதிமுகவை வீழ்த்திய விஜய் ஆட்சி.. “ஆனால் நடந்தது இதுதான்!”.. போட்டு உடைத்த ஜேம்ஸ் வசந்தன்!

-

- Advertisement -

‘தவெக ஆட்சியின் பின்னணியில் டெல்லி!’ — சினிமா பிரபலம், ஜோதிட நம்பிக்கை மற்றும் நிர்வாகத் திறன் குறித்து காரசார விமர்சனம்!திமுக, அதிமுகவை வீழ்த்திய விஜய் ஆட்சி.. "ஆனால் நடந்தது இதுதான்!".. போட்டு உடைத்த ஜேம்ஸ் வசந்தன்!

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு, டெல்லியில் உள்ள பாஜக தலைமையின் நிழல் அரசாகவே இயங்கி வருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநில முதன்மைச் செயலாளர் ஆலூர் ஷாநவாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், தற்போதைய ஆட்சி நிர்வாகம், சினிமா அரசியல் மற்றும் மூடநம்பிக்கைகள் குறித்துத் தனது கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளார்.

“டெல்லியின் நேரடி ஆதிக்கம்”
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு, பதவி நீட்டிப்பு பெற்றுள்ள தலைமைச் செயலாளர் இன்னமும் மாற்றப்படாமல் இருப்பது டெல்லியின் நேரடி ஆதிக்கத்திற்குச் சான்றாக உள்ளது என்று ஆலூர் ஷாநவாஸின் கருத்தை சுட்டிக்காட்டி ஜேம்ஸ் வசந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.திமுக, அதிமுகவை வீழ்த்திய விஜய் ஆட்சி.. "ஆனால் நடந்தது இதுதான்!".. போட்டு உடைத்த ஜேம்ஸ் வசந்தன்!

சினிமா பிரபலமும் அரசியலும்
தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக தலைவர் விஜய் ஆட்சியைப் பிடித்தது குறித்துப் பேசிய அவர்,  நடிகர் விஜயின் திரைப்பிரபலமும், மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த வரவேற்பும் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. இது ஒரு கொள்கை அடிப்படையிலான அரசியல் வெற்றியை விட, “அரசியலை விட சினிமா பிரபலமே பெரியது” என்ற மக்கள் மனநிலையையே வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கட்சியைத் தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியைப் பெற்றிருந்தாலும், தற்போதைய ஆட்சியின் நிர்வாக செயல்பாடுகள், கொள்கை முடிவுகள் மற்றும் ஆளுமை திறன் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து சந்தேகங்களும் கேள்விகளும் தொடர்ந்து எழுந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.திமுக, அதிமுகவை வீழ்த்திய விஜய் ஆட்சி.. "ஆனால் நடந்தது இதுதான்!".. போட்டு உடைத்த ஜேம்ஸ் வசந்தன்!

ஜோதிட நம்பிக்கையும் பகுத்தறிவும்
முதலமைச்சர் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகம் தொடர்பான இடமாற்றங்கள் ஜோதிடத்தின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டைக் குறிப்பிட்ட அவர், “மக்கள் மீதும் தன் மீதும் முழு நம்பிக்கை உள்ளவர்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளைத் தேட வேண்டிய அவசியமில்லை. பகுத்தறிவுப் பாதையில் நடப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் கருப்புச் சட்டை, குங்குமம் போன்ற விவகாரங்களில் வெளிப்படையாகவும் தெளிவுடனும் இருக்க வேண்டும்.”

நிர்வாகத் திறன் & எதிர்க்கட்சி விமர்சனம்
திமுகவின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடப் போவதாக தவெக தரப்பு கூறிவருவதை வரவேற்பதாகத் தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன், அதேவேளையில் சமீபத்தில் வெளியான திரைப்பட வெளியீட்டின் போது திரையரங்குகளில் நடந்த கட்டணக் கொள்ளை போன்ற வெளிப்படையான முறைகேடுகளையும் முதலமைச்சர் தட்டி கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், முதலமைச்சர் பதவியில் இருப்பவர்கள் கண்ணியமான முறையிலும், அடிப்படை மனிதாபிமானத்துடனும் பேச வேண்டும் என்றும், அரசியல் முதிர்ச்சியின்றி நடந்து கொள்வது ஒரு தலைமைப் பண்புக்கு அழகல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

விளையாட்டில் தமிழக இளைஞர்கள் உலகை வெல்லட்டும்!” – ராஜா முத்துப்பாண்டியை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

MUST READ