Homeசெய்திகள்அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்குப் பணி ஆணை வழங்கியது தமிழ்நாடு...

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்குப் பணி ஆணை வழங்கியது தமிழ்நாடு அரசு

-

- Advertisement -

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளியில் (Tender) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரபல நகை விற்பனை நிறுவனமான ஜோயாலுக்காஸ் (Joyalukkas) முதலமைச்சர் ஜோசப் விஜய்க்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்குப் பணி ஆணை வழங்கியது தமிழ்நாடு அரசு

‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளைக் கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள 22 கேரட் (BIS 916) தங்க மோதிரங்கள் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

ஒப்பந்தப் புள்ளி புள்ளி விவரம்இத்திட்டத்திற்கான தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் (TNMSC) கோரப்பட்ட டெண்டரில் 11 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

அதில் தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து மற்றும் ஹால்மார்க் முத்திரைக் கட்டணங்களுக்குச் சேர்த்து வெறும் 1 பைசா (₹0.01) மட்டுமே கூடுதல் கட்டணமாகக் கோரி ஜோயாலுக்காஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலைப்புள்ளி (L1) அளித்த நிறுவனமாகத் தேர்வானது.

இதன் அடிப்படையில், ஜோயாலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 70:30 என்ற விகிதத்தில் தங்க மோதிரங்கள் வழங்குவதற்கான பணி ஆணையைத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் ‘எக்ஸ்’ தளப் பதிவு இப்பணி ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜோயாலுக்காஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான ‘எக்ஸ்’ (X)-இல் வெளியிட்டுள்ள பதிவில்:

“முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தமிழ்நாட்டின் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பங்கேற்பதை நாங்கள் பெரும் பெருமையாகக் கருதுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிக்கவும், ஏழை எளிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும் நோக்கிலும் செயல்படுத்தப்படும் இத்திட்டம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம்!” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.3,000 வரை சேமிப்பு!

MUST READ