தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தவெக (TVK) உறுப்பினர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்பதில் திமுக அமைச்சர்கள் திணறி வரும் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனது நிதானமான மற்றும் அனுபவமிக்க வாதங்களால் எதிர்கட்சிக்கு வலுசேர்த்து வருகிறார். எதிர்க்கட்சித் தரப்பின் கேள்விகளுக்குச் சட்டரீதியாகவும், மரபு ரீதியாகவும் அவர் அளிக்கும் விளக்கங்கள் அவையில் பெரும் கவனம் ஈர்த்துள்ளன.


‘9 ஆயிரம் கோடி’ விவகாரமும் ஓபிஎஸ்-ன் விளக்கமும்: சமீபத்தில் லாட்டரி விவகாரம் தொடர்பாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய ‘9 ஆயிரம் கோடி’ நிதி குறித்த கேள்விக்கு, திமுக உறுப்பினர்கள் தகுந்த பதிலடி கொடுக்க முடியாமல் தவித்தனர். அச்சமயத்தில் எழுந்த ஓ. பன்னீர்செல்வம், “நன்கொடை வாங்குவது நீண்டகால நடைமுறைதான். நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி மூலமே நடைபெறுகின்றன. எனவே, இதை லஞ்சப்பணம் போலச் சித்தரிக்க வேண்டாம்” என்று தெளிவாக விளக்கமளித்தார். இந்த ஒரு விளக்கம் அவையில் நிலவிய சலசலப்பை அடக்கி, ஓபிஎஸ் அடித்த ‘முதல் சிக்சராக’ அமைந்தது.
‘இடம் மாறியது யார்?’ – அனல் பறந்த வார்த்தை போர்: அமைச்சர் செங்கோட்டையன், ஓபிஎஸ் இடமாறி இருப்பதை விமர்சித்துப் பேசியபோது, “முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் தான்” என்று ஓபிஎஸ் பதிலடி கொடுத்தது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தனது இதயத்தில் அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இருப்பதாகவும், தற்போது தான் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலினே காரணம் என்பதால், அவரது படத்தை வைத்துள்ளேன் என்றும் ஓபிஎஸ் அளித்த பதில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.
மரபு குறித்த பாடம்: முதலமைச்சர் அவைக்கு வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்கவில்லை என்று தவெக தரப்பில் எழுப்பப்பட்ட புகாருக்கு, ஓபிஎஸ் அளித்த பதில் பேரவை மரபுகளைத் தெளிவாக எடுத்துரைத்தது. “சபாநாயகர் வரும்போது எழுந்து நின்றால் போதும், முதலமைச்சர் தனது இருக்கைக்குச் சென்று வணக்கம் செலுத்திவிட்டு அமர்வதே மரபு. முதல்வர் வருவதற்காக எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்று அவர் கூறியது, தவெக தரப்புக்குச் சபாநாயகர் வாயிலாகவே பாடமாக அமைந்தது.
திமுகவின் பலமாக மாறும் ஓபிஎஸ்: சட்டமன்றத்தில் திமுக தரப்பில் மூத்த உறுப்பினர்கள் சிலரே வாதங்களில் முதிர்ச்சியுடன் செயல்படும் நிலையில், ஓபிஎஸ்-ன் வருகை மற்றும் அவரது அணுகுமுறை திமுகவுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்று கூறலாம். அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளைக் கடந்து, அவையின் கண்ணியத்தையும் மரபுகளையும் முன்னிறுத்தி அவர் பேசும் விதம், எதிர்கட்சிக்கு இன்னும் வலு சேர்க்கும் என உடன்பிறப்புகள் கருதுகின்றனர்.
இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் முழுவதும், ஓபிஎஸ்-ன் பங்களிப்பு திமுகவுக்கு ஒரு பெரும் பக்கபலமாக மாறியுள்ளது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
