HomeBreaking Newsஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. 'Toxic' படக்குழு வெளியிட்ட 'எலிசபெத்' கேரக்டர் லுக்!

ஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. ‘Toxic’ படக்குழு வெளியிட்ட ‘எலிசபெத்’ கேரக்டர் லுக்!

-

- Advertisement -

Toxic திரைப்படத்தில் ‘எலிசபெத்’ கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷி! நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது படக்குழு!ஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. 'Toxic' படக்குழு வெளியிட்ட 'எலிசபெத்' கேரக்டர் லுக்!

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘Toxic’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் அவர் ‘எலிசபெத்’ என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஹூமா குரேஷியின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இப்படத்தின் சிறப்புப் போஸ்டரை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

we-r-hiring

ஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. 'Toxic' படக்குழு வெளியிட்ட 'எலிசபெத்' கேரக்டர் லுக்!

கவனத்தை ஈர்க்கும் ‘எலிசபெத்’ தோற்றம்
வெளியாகியுள்ள சிறப்புப் போஸ்டரில் ஹூமா குரேஷியின் ‘எலிசபெத்’ தோற்றம் மிகவும் மர்மமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, படத்தில் இவரது கதாபாத்திரம் எந்த அளவுக்குக் வலுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது இப்படத்தின் மூலம் அவர் தனது நடிப்புத் திறனை மேலும் ஒரு புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. 'Toxic' படக்குழு வெளியிட்ட 'எலிசபெத்' கேரக்டர் லுக்!

பெரும் எதிர்பார்ப்பில் ‘Toxic’ திரைப்படம்
பிரமாண்டமான முறையில் உருவாகி வரும் ‘Toxic’ திரைப்படத்தில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கலைஞர்களும், புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இணைந்து நடித்து வருகின்றனர். ஹூமா குரேஷியின் வருகை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும், புதிய கதாபாத்திரத்திற்கான வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாளில் ரசிகர்களை நேரில் சந்தித்த நடிகர் தனுஷ்: போயஸ் கார்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்!

MUST READ