Homeசெய்திகள்ஆன்மீகம்ஆடி பௌர்ணமி கிரிவலம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஆடி பௌர்ணமி கிரிவலம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

-

- Advertisement -

நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம்; அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் கோலாகலம்!
திருப்பரங்குன்றம்.ஆடி பௌர்ணமி கிரிவலம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆடிப் பௌர்ணமி திருநாளை முன்னிட்டுப் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.  அதிகாலை முதலே கோயிலில் திரண்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை வழிபாட்டனர்.

we-r-hiring

சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
ஆடிப் பௌர்ணமியை ஒட்டி, திருக்கோயிலில் உள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை அம்மனுக்குப் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும், ஆடிப் பௌர்ணமி தினத்தின் முக்கிய நிகழ்வாகக் கோயில் வளாகத்தில் உள்ள காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமிக்குச் சந்தனக் காப்பு அலங்காரமும், வண்ண மலர்களால் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.ஆடி பௌர்ணமி கிரிவலம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

மலை சுற்றி கிரிவலம் வந்த பக்தர்கள்
ஆடிப் பௌர்ணமி நன்னாளில் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் வருவது மிகவும் புனிதம் என்பதால், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து கிரிவலம் வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் சார்பிலும், காவல்துறை சார்பிலும் நீண்ட வரிசையில் செல்பவர்களுக்குக் குடிநீர் வசதி, சிறப்பு வரிசைப் பாதைகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

65 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை: திருவொற்றியூரில் கிளி வாகனத்தில் ஆண்டாள் வீதி உலா!

MUST READ