Homeசெய்திகள்அரசியல்தவெகவில் இணையும் அதிமுக மாஜிக்கள்: 6 பேருக்கு மாநில அளவிலான பதவி? - கட்சித் தலைமை...

தவெகவில் இணையும் அதிமுக மாஜிக்கள்: 6 பேருக்கு மாநில அளவிலான பதவி? – கட்சித் தலைமை தீவிரத் திட்டம்!

-

- Advertisement -

அதிமுகவில் இருந்து விலகி, தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 6 பேருக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக

we-r-hiring

இன்று நடைபெறும் பிரம்மாண்ட இணைப்பில் 2,000-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையவுள்ள சூழலில், இந்தத் தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த தலைவர்கள்

சமீபத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளைத் துறந்து தவெகவில் இணைந்தனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோரும் தவெகவில் இணைந்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர்.

பொறுப்புகளுக்காகக் காத்திருக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களுக்கு உடனடியாக முக்கியப் பதவிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தலைவர் விஜய்யை நேரில் சந்திக்கவே சிரமப்பட்டு வந்ததாகப் பேச்சுக்கள் அடிபட்டன.

குறிப்பாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவியைக் கைப்பற்றி மீண்டும் விராலிமலையில் போட்டியிடும் திட்டத்தோடும், எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டப் பொறுப்பை எதிர்பார்க்கும் நோக்கோடும் காய் நகர்த்தி வந்ததாகக் கூறப்பட்டது.

தொடக்க கால நிர்வாகிகளுக்கு விஜய் அளித்த உறுதி!

மாஜிக்களின் இந்த நகர்வுகள் தவெகவின் தொடக்க கால நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால், அவர்கள் இவிஷயத்தைக் கட்சியின் தலைமைக்குக் கொண்டு சென்றனர்.

இதையறிந்த தவெக தலைவர் விஜய், “நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். உங்களுக்கான பதவிகளில் எந்த இடையூறும் இருக்காது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” எனத் தெள்ளத்தெளிவாகக் கூறி, நிர்வாகிகளின் அச்சத்தைப் போக்கியுள்ளதாகத் தலைமை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று 6 பேருக்குத் தலைமைப் பதவி அறிவிப்பு?

இந்தச் சூழலில், முதல்கட்டமாகச் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்த 6 முக்கியத் தலைவர்களுக்கும் மாநில அளவிலான பொறுப்புகளை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இன்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையவுள்ள நிகழ்ச்சியின் போது, இந்த 6 பேருக்குமான புதிய பொறுப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களைத் தொடர்ந்து கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத் உள்ளிட்ட பிற முன்னாள் அமைச்சர்களுக்கான பதவிகள் அடுத்தகட்டமாக வழங்கப்படலாம் என்றும், இதனால் அதிமுகவிலிருந்து விலகிய மாஜி தலைவர்கள் பதவிகளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ…” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

MUST READ