சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 வரை அதிகரித்து நகை வாங்குவோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றங்கள் காரணமாகத் தங்கம் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி தங்கம் விலை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
காலை நிலவரம்- இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்த்தப்பட்டது.
மாலை நிலவரம் – மாலையில் மேலும் சவரனுக்கு ரூ.960 உயர்த்தப்பட்டது.
இதன் மூலம், ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.2,240 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,07,840 என்ற புதிய உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள போதிலும், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும்மின்றி நிலையாக நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.240 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: சவரன் ரூ.1,06,880-க்கு விற்பனை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!
