Homeசெய்திகள்சென்னைதாறுமாறாக உயரும் தங்கம் விலை: சவரன் ரூ.1,10,000-ஐத் தொட்டு புதிய உச்சம்!

தாறுமாறாக உயரும் தங்கம் விலை: சவரன் ரூ.1,10,000-ஐத் தொட்டு புதிய உச்சம்!

-

- Advertisement -

தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு வருவது நகை வாங்குவோரையும், நடுத்தரக் குடும்பத்தினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.4,400 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே, குறிப்பாய் தாய்மார்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தாறுமாறாக உயரும் தங்கம் விலை: சவரன் ரூ.1,10,000-ஐத் தொட்டு புதிய உச்சம்!

we-r-hiring

கிடுகிடுவென உயரும் விலை நிலவரம்:
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,000 என்ற வரலாற்றுச் சாதனை எல்லையைத் தொட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் மற்றும் ராட்சத விலை உயர்வு நகைப்பிரியர்களை மிரளச் செய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,400 வரை விலை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை, நடுத்தர மக்களின் கவலை:
மத்திய-மாநில அரசுகளின் பண்டிகைக் கால நெருக்கம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நிறைந்த மாதங்களில் தங்கம் விலை இமாலயச் சென்றுள்ளது இல்லத்தரசிகளையும், பெற்றோர்களையும் கலக்கமடையச் செய்துள்ளது. நடுத்தரக் குடும்பத்தினர் தங்கள் நீண்டகால சேமிப்பைக் கொண்டு தங்க நகைகளை வாங்கும் கனவு தற்போது விலைவாசி உயர்வு காரணமாக கைமீறிச் செல்வதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை தொடர் உயர்வை அடைந்து வருவது சாமானிய மக்களின் பொன்மகள் திருமணக் கனவுகளைச் சிதைக்கும் வகையில் உள்ளதால், விலையைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய ஒற்றைக் குரலாக உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்- ஊத்தங்கரை எம்.எல்.ஏ பேரம் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம் சட்டப்பேரவைக்கு முன் விஜய் அரசுக்கு அடுத்தடுத்த சட்டச் சிக்கல்கள்!

MUST READ