- Advertisement -
முரசு புயலின் போது கடலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த அவர், அவர்களது துயரத்தில் பங்கேற்று ஆறுதல் கூறியதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியையும் வழங்கினார்.

புயலின் தாக்கத்தால் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவிக்கரம் நீட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
