Homeசெய்திகள்சென்னைமாமனாரின் நினைவாக ரூ.1.5 கோடியில் கோவில் கட்டிய மருமகன் – நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பாசம்!

மாமனாரின் நினைவாக ரூ.1.5 கோடியில் கோவில் கட்டிய மருமகன் – நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பாசம்!

-

- Advertisement -

சென்னை போரூர் அருகே, மறைந்த தனது மாமனாரின் நினைவாக ரூ.1.5 கோடி செலவில் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்திய மருமகனின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாமனாரின் நினைவாக ரூ.1.5 கோடியில் கோவில் கட்டிய மருமகன் – நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பாசம்!

கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் பெரியநாயகம். அவர் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்த அவரது மருமகன் சாரதி, மாமனாரின் நினைவாகக் கோவில் ஒன்றைக் கட்ட முடிவு செய்தார்.

we-r-hiring

இதன்படி, தனது சொந்த செலவில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பில் கோவில் கட்டியுள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சாரதி, மாமனார் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தும் வகையில், அவரது உருவத்தைத் தனது கையிலும் பச்சைக் குத்தியுள்ளார்.

தொடர்ந்து, கோவிலில் மாமனாரின் உருவச் சிலையை நிறுவி திறந்து வைத்ததுடன், கும்பாபிஷேக விழாவையும் நடத்தினார்.

இந்த விழாவில் சுமார் 2,000 ஏழை, எளிய மக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சாரதி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

மறைந்த மாமனாரின் நினைவாக மருமகன் கோவில் கட்டி வழிபாடு நடத்திய சம்பவம், குடும்ப உறவுகளின் பாசத்தையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகப் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சென்னையில் ‘வெற்றி காய்கறித் தொகுப்பு திட்டம்’ தொடக்கம் – இலக்கு, கொள்முதல் விவரங்கள் குறித்து கேள்விகளுக்கு அமைச்சர் மழுப்பலான பதில்!

MUST READ