சென்னையில் ‘வெற்றி காய்கறித் தொகுப்பு திட்டத்தை’ அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் எத்தனை காய்கறித் தொகுப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்காக எவ்வளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள் கவனம் பெற்றுள்ளன.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் காந்திராஜ், முதலில் ஒரு குடும்பத்திற்கு ஒரு காய்கறித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர், எத்தனை தொகுப்புகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று தனது பதிலை மாற்றிக் கூறினார். அமைச்சரின் இந்த மாறுபட்ட பதிலைக் கேட்ட அருகில் இருந்த அதிகாரி அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், திட்டத்தின் கீழ் எத்தனை தொகுப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்காக எவ்வளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான கேள்விகளுக்கும் தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை.
இதனால், திட்டத்தின் செயல்பாடு மற்றும் விநியோக முறை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
என் பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள் – கண்ணகி நகர் கபடி வீராங்கனை கார்த்திகா விளக்கம்!
