சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள், விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி நாட்கள் குறைவாக இருப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பட்டாசுகளை வாங்கி இருப்பு வைத்துள்ள நிலையில், வெறும் நான்கு நாட்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டால் முதலீட்டை எவ்வாறு மீட்டெடுப்பது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தீவுத்திடலில் பட்டாசுக் கடை அமைத்துள்ள வியாபாரிகள் கூறுகையில், “வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, நகைகள் அனைத்தையும் அடகு வைத்து இரண்டு மாதங்களுக்கு முன்பே பட்டாசுகளை வாங்கி வைத்துவிட்டோம்.
கடந்த காலங்களில் 120 கடைகள் இருந்த தீவுத்திடலில் தற்போது வெறும் 30 கடைகள் மட்டுமே உள்ளன.
முதலமைச்சர் விஜயின் ஆட்சி சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், அதிகாரிகள் வெறும் நான்கு நாட்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கினால் எங்களுடைய வாழ்வாதாரம் எப்படி இருக்கும்? இவ்வளவு முதலீடு செய்து பட்டாசுகளை வாங்கி வைத்துள்ள எங்களுக்கு விற்பனை செய்யப் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தனர்.
பட்டாசு விற்பனைக்காக ஏற்கெனவே பெரும் தொகையை முதலீடு செய்துள்ள வியாபாரிகள், அனுமதி நாட்கள் குறைக்கப்பட்டதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனைக்குக் கூடுதல் நாட்கள் அனுமதி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை MRC நகரில் வைக்கப்பட்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டி, முதலமைச்சர் விஜய் வரவேற்பு பேனர்கள் அகற்றம்!
