Homeசெய்திகள்தமிழ்நாடுவேளாண் பட்ஜெட் 2026 - கண்துடைப்பு அறிவிப்புகளா? விவசாயிகளை ஏமாற்றும் வெற்று வாக்குறுதிகளா? - தமீமுன்...

வேளாண் பட்ஜெட் 2026 – கண்துடைப்பு அறிவிப்புகளா? விவசாயிகளை ஏமாற்றும் வெற்று வாக்குறுதிகளா? – தமீமுன் அன்சாரி ஆவேசம்!

-

- Advertisement -

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு நாடகமாக மாறியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்ஜெட்டில் அள்ளி வீசப்பட்ட பிரம்மாண்டமான அறிவிப்புகளுக்கும், ஒதுக்கப்பட்ட சொற்ப நிதிக்கும் எந்தவிதப் பொருத்தமும் இல்லை என்று சாடியுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, அரசின் போக்கைக் கண்டித்துப் பரபரப்பான பேட்டிய ஒன்றை அளித்துள்ளார்.“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!

கோடை மழையை எதிர்பார்த்தால்… மின்னல் வெளிச்சம் காட்டி ஏமாற்றுவதா?
​வேளாண் பட்ஜெட்டில் உழவர் சந்தைகளைப் புனரமைப்பது, மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் விருது வழங்குவது மற்றும் வேளாண் தொழில்நுட்பப் பட்டயக் கல்லூரி தொடங்குவது போன்ற சில நல்ல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ​ஆனால், விவசாயிகளின் தலையாய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய இந்த பட்ஜெட் குறித்துக் கூறுகையில், “இந்த வேளாண் பட்ஜெட்டில் கோடை மழையை எதிர்பார்த்தோம், ஆனால் ஏமாற்ற மிஞ்சும் வகையில் வெறும் மின்னல் வெளிச்சங்களே தென்படுகின்றன” என்று தமீமுன் அன்சாரி கடுமையான விமர்னத்தை முன்வைத்துள்ளார்.

we-r-hiring

​புள்ளிவிவரப் பூச்சுகள்: நிஜத்தில் ஏமாற்றப்படும் விவசாயிகள்!
​அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டிற்கும் இடையே எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அவர் அப்பட்டமாகப் புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்:

  • ​தார்ப்பாய் விநியோகத்தில் கணக்குக் தில்லுமுல்லு: மழையிலிருந்து தானியங்களைப் பாதுகாக்க 43,500 விவசாயிகளுக்குத் தார்ப்பாய் வழங்கப்படும் என்றும், அதற்கு ₹10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு தார்ப்பாயின் விலை குறைந்தபட்சம் ₹2,000 என்று வைத்துக் கொண்டால் கூட, இந்தத் தொகை ஒருசில ஆயிரம்பேருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அப்படியானால் மீதமுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நிலை என்ன?
  • ​சீமைக்கருவேல மர அகற்றம் – ஒரு கேலிக்கூத்து: ஒட்டுமொத்த தமிழகத்திலும் தலைவிரித்தாடும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அழிக்க வெறும் ₹4 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரங்களின் வாடகை மற்றும் ஓட்டுநர் கூலி விலை எகிறியுள்ள இந்தக் காலத்தில், இந்தத் தொகை எங்கு போய்ச் சேரும்? இது வெறும் கண்துடைப்பு நாடகம் இல்லையா?
  • ​செயற்கை நுண்ணறிவு (AI) திட்டமா? – பெயரளவிலான ஒதுக்கீடு: நவீன காலத்திற்கு ஏற்ப விவசாயத்தைத் மேம்படுத்தப் போவதாகக் கூறிவிட்டு, ஏ.ஐ. தொழில்நுட்பத் திட்டங்களுக்கு வெறும் ₹2 கோடி மட்டுமே ஒதுக்கித் தங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்கிறோம் என்றார்.

​கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னவானது? ஏமாற்றும் அரசு!
​தேர்தல் காலத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மற்றும் பெரு விவசாயிகளுக்கு 50% கூட்டுவிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முழங்கப்பட்ட தவெக அரசின் வாக்குறுதி என்ன ஆனது? இன்றைய பட்ஜெட்டில் இது குறித்த ஒரு வார்த்தைகூட இடம்பெறாதது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட பச்சைத் துரோகம் என ஆவேசம் பொங்கக் கேள்வியெழுப்பியுள்ளார்.

​குறுவை மற்றும் சம்பா பேரழிவு: அரசு செவிமடுக்குமா?
​காவிரி நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹15,000 இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களைப் போல சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ₹20,000 மானியமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ​மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்குரிய 40 டிஎம்சி காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசின் போரைக் கண்டித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உரிமையை மீட்கத் தவெக அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்: ரூ.1.20 கோடியில் ‘தமிழ்நாடு தளிர்கிரைகள் திட்டம்’ அறிமுகம்!

MUST READ