Homeசெய்திகள்தமிழ்நாடுவிவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம் தந்த பட்ஜெட் - தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு...

விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம் தந்த பட்ஜெட் – தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு – பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!

-

- Advertisement -

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் வேளாண் பட்ஜெட், விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் உரிமை மீட்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும், தற்போதைய பட்ஜெட்டுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம் தந்த பட்ஜெட் - தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு - பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!

​தேர்தல் வாக்குறுதிகளும் நிதர்சனமும்!
​தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

we-r-hiring
  • ​விலை நிர்ணயம்: நெல் குவிண்டாலுக்கு ₹3,500 மற்றும் கரும்பு டன்னுக்கு ₹4,500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை.
  • ​கடன் தள்ளுபடி: சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு 50% தள்ளுபடியும் நிபந்தனையின்றி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய பட்ஜெட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

​பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றமா?
​வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள நவீன வேளாண்மை, விதை சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் போன்ற திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவைதான் என்று பி.ஆர்.பாண்டியன் சுட்டிக் காட்டுகிறார். கடந்த கால ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்து, நிதி ஒதுக்கீட்டைச் சிறிதளவு உயர்த்திவிட்டு விளம்பரம் தேடிக்கொள்வதாகவும், இது விவசாய உற்பத்திக்குப் பெரிதும் உதவாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​விலை நிர்ணயக் குழுக்களின் அவசியமும், அரசின் மௌனமும்
​விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் ‘விலை நிர்ணய குழுக்கள்’ அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை இடர்ப்பாடுகளாலும் காலநிலை மாற்றத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்படும் விவசாயிகளின் இழப்பில் அரசு பங்கேற்க முன்வர வேண்டும் என்றும், உற்பத்திப் பொருள்களுக்குரிய சந்தை வாய்ப்புகளையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

​வாழைக்கு ‘முட்டு’ கொடுப்பதை விட்டுவிட்டு விலையைக் கொடுங்கள்!
​வாழை விவசாயிகளுக்கு ‘முட்டு’ கொடுப்போம் என்று அரசு அறிவித்துள்ளதை விமர்சித்துள்ள பி.ஆர்.பாண்டியன், “அரசு வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை; மாறாக, உற்பத்தியாகும் வாழைக்கு லாபகரமான விலையை உத்தரவாதம் செய்தால், முட்டுக்கொடுப்பதெல்லாம் விவசாயிகளே பார்த்துக் கொள்வார்கள்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். ​ஒட்டுமொத்தமாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டு, வெறும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே நம்பித் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வேளாண் பட்ஜெட்டுக்கு எதிராகத் தமிழக அரசு விளக்கம்ளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் விவசாயிகள் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை ஏமாற்றும் தமிழக வெற்றிக்கழக அரசின் வேளாண் பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு!

MUST READ